'கத்தி குத்தையும் தாங்கி'...பெண்ணை காப்பாற்றிய ''தெரு நாய்''!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 30, 2019 07:33 PM

தனக்கு உணவளித்த பெண்ணை,பாலியல் வன்கொடுமையிலிருந்து காப்பாற்றி சலுயூட் போட வைத்துள்ளது தெரு நாய் ஒன்று.

Stray Dog Saves Bhopal Woman From Being Molested

மத்தியப்பிரதேச மாநிலம் சோலா பகுதியில் வசித்து வருபவர் ஷோ.திருமணமான ஷோவும் அவரது கணவரும் நாய்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.இதனால் அவரின் வீட்டிற்கு அருகில் சுற்றி திரியும் தெரு நாய் ஒன்றிற்கு வழக்கமாக உணவளித்து வந்திருக்கிறார்.அதற்கு ஷெரு என பெயரிட்டு அன்பாக கவனித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷோவின் கணவர் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்தார்.வீட்டில் ஷோவும் அவருடன் நாய் ஷெருவும் இருந்துள்ளது.அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுனில் என்பவர் ஷோ வீட்டு கதவை தட்டியுள்ளார்.பக்கத்து வீட்டுக்காரர் தானே என்ற எண்ணத்தில் ஷோவும் கதவை திறந்துள்ளார்.அப்போது திடீரென ஷோவை கீழே தள்ளி அவரை தாக்கியுள்ளார் சுனில்.இதனால் நிலைகுலைந்த ஷோவை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.

இதனிடையே ஷோவின் அலறல் சத்தத்தை கேட்ட நாய் ஷெரு, சுனில் மீது பாய்ந்து தாக்கியுள்ளது.இதனை சற்றும் எதிர்பாராத சுனில்,நாயிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தான் வைத்திருந்த கத்தியால் நாய் ஷெருவை கடுமையாக தாக்கியுள்ளார்.இருப்பினும் விடாமல் நாய் தாக்கியதால்,சுனில் அங்கிருந்து தப்பி ஓடினார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் கத்தியால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த நாய் ஷெருவை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.தப்பியோடிய குற்றவாளி சுனிலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.தனது எஜமானருக்கு ஒரு ஆபத்து என்றதும்,கடைசி வரை போராடி அவரை காப்பாற்றிய நாய் ஷெருவின் செயல் அந்த பகுதி மக்களின் நெஞ்சங்களில் இடம்பெற்றுள்ளது.தற்போது ஷெரு காயத்திலிருந்து மீண்டு வர வேண்டும் என,அந்த பகுதி மக்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.

Tags : #SEXUALABUSE #STRAY DOG #MOLESTED #BHOPAL