‘பதறவைத்த லாரியால் மாணவருக்கு நேர்ந்த சோகம்’.. சிசிடிவி காட்சிகள்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 31, 2019 04:45 PM

கல்லூரி மாணவர் ஒருவர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN - college boy passes away after meeting an accident with a lorry

சென்னை லட்சுமிபுரம் பகுதியில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதான கிஷோர் என்கிற மகன் இருந்திருக்கிறார். கிஷோர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் கிஷோர் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது கிஷோருக்கு பின்னால் வந்துகொண்டிருந்த லாரி ஒன்று அவர்மீது மோதி, அவரை தள்ளிக்கொண்டே சென்றுள்ளது. இதனால் கிஷோர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதனால் லாரியின் முன்பக்க சக்கரம் கிஷோரின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே கிஷோர் உயிரிழந்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் கிஷோரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் லாரி ஓட்டுனரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #CHENNAI #ACCIDENT #BIZARRE #CCTV