11 முறை முயற்சி செய்து உருவத்தில் மைக்கேல் ஜாக்சனாகவே மாறிய வைரல் இளைஞர்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 31, 2019 06:00 PM

உலக ரசிகர்களின் இசைமூச்சான பாப் பாடகரும், நடனப்புயலுமான மைக்கேல் ஜாக்சனைப் போல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு முகத்தை மாற்றிக் கொண்ட நபரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Man got Michael Jackson face after undergone 11 plastic surgeries

தன்னுடை பாப் இசையின் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் மைக்கேல் ஜாக்சன். இன்றளவும் மைக்கேல் ஜாக்சனைப் போல் ஆடவேண்டும் என்றுதான் இளைஞர்கள் பலர் அவரது நடனத்தைப் வீடியோவில் பார்த்து கற்றுக் கொண்டிருகின்றனர்.

இதேபோல் அர்ஜண்டினாவைச் சேர்ந்த மைக்கேல் ஜாக்சனின் ரசிகர் ஒருவர் ஒரு விநோதமான முடிவை எடுத்திருக்கிறார். 22 வயது மதிக்கத்தக்க லொயோ ப்ளான்கோ என்கிற இந்த இளைஞர் சிறுவயதிலிருந்தே மைக்கேல் ஜாக்சனைப் போல் தனது உடல் மொழிகளை மாற்றத் தொடங்கியுள்ளார்.

மேலும் மைக்கேல் ஜாக்சனை போன்றே இவரும் மேடைப் பாடல்கள், நடனங்கள் போன்றவற்றை மேற்கொண்டு வந்துள்ளார். இதனையடுத்து பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மைக்கேல் ஜாக்சனைப் போல் முகத்தை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து ஆபரேஷனும் செய்துள்ளார். ஆனால் அந்த ஆபரேஷனில் திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஒரு முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இப்படியாக 11 முறை லொயோ ப்ளான்கோ, தன் முகம், மைக்கேல் ஜாக்சனை போல வரவேண்டும் என்பதற்காக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.

ஒருவழியாக கடைசியாக செய்த சர்ஜரியில் ஓரளவுக்கு திருப்தி ஏற்பட்டதால் லொயோ ப்ளான்கோ தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மைக்கேல் ஜாக்சன் போன்ற முகத்திற்காக லொயோ ப்ளான்கோ 21 லட்சத்து 31 ஆயிரத்து 350 ரூபாய் செலவழித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மைக்கேல் ஜாக்சன் போன்ற லொயோ ப்ளான்கோவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #MICHAELJACKSON #VIRAL #ARGENTINA