வகுப்புக்கு வந்த ஆசிரியரை டிக்-டாக் வீடியோ எடுத்து கேலி செய்த மாணவர்களுக்கு தண்டனை!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 22, 2019 05:02 PM

மாணவர்கள் சிலர் சேர்ந்து தங்களது வகுப்பிற்கு வந்த ஆசிரியரை கேலிசெய்து வெளியிட்ட டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN - students suspended after teasing teacher by doing tiktok video

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலுள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியின் 12-ஆம் வகுப்புக்குள் நுழைந்த ஆசிரியரை, அங்கு படிக்கும் 6 மாணவர்கள் சேர்ந்து செல்போனில் டிக் டாக் செயலி மூலம்  வீடியோ எடுத்து கிண்டல் செய்யும் வகையில் பதிவேற்றியுள்ளனர்.

அந்த வீடியோவில், மாணவர் சமீபத்தில் வெளியான படம் ஒன்றின் பாடல் பின்னணியில் ஒலிக்க, வகுப்பிற்குள் நுழையும்போது நோட்டை கையில் சுற்றிக்கொண்டு வருகிறார். வகுப்பறையில் இருந்த ஆசிரியரின் முன் இன்னொரு மாணவர் ஒருவர் தலையில் கைகுட்டையைக் கட்டிக்கொண்டு நடனமாடுவதும் மேசையை பிடித்து இழுப்பதுமாக சேட்டை செய்துள்ளார்.

இதனையடுத்து ஆசிரியரை கேலி செய்த 6 மாணவர்களை நடவடிக்கை எடுக்கும் விதமாக அப்பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. 

Tags : #STUDENTS #TEACHERS #VIRAL #TIKTOK