‘மச்சான்.. என் மேரேஜ் இன்விட்டேஷன தூக்கி போட்ரு ப்ளீஸ்’.. அசரவைக்கும் காரணம்?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 31, 2019 02:08 PM

இயற்கை வாழ்வும் விவசாயமும் அழிந்துகொண்டு வரும் இந்த நாட்களில்  வித்தியாசமான திருமண அழைப்பிதழை ஒருவர் கொடுத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

\'Please throw my marriage invitation\', man told his friend here is why

பேஸ்புக்கில் வந்த வீடியோ ஒன்றில் பேசும் நபர் ஒருவர் தனக்கு தனது நண்பர் ஒருவர், அவரது திருமணத்துக்கு அழைக்கும் வகையில் கொண்டுவந்து கொடுத்த திருமண அழைப்பிதழை பார்த்ததும் பரிசுப்பொருள் என்று நினைத்துள்ளார் இந்த நபர். ஆனால் அது அழைப்பிதழாம். அப்படி என்ன சிறப்புகள் அந்த அழைப்பிதழில் என்று அவருக்குத் தோன்றியுள்ளது. அதைப் பற்றித்தான் சிலாகித்து பேசியுள்ளார்.

பார்ப்பதற்கு ஒரு குட்டி கனசதுர பாக்ஸ் போல இருக்கும் அந்த திருமண அழைப்பிதழ் பெட்டி ஆட்டிப்பார்த்தால் அதற்குள் கற்கள் இருப்பதுபோல் சத்தம் கேட்கிறது. ஆனால் அதை அந்த நபர் திறந்து பார்க்கிறார். அதில் அவரது நண்பர் நாதனின் திருமண நிகழ்வு விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் அந்த பெட்டிக்குள் இருந்ததோ விதைப்பந்துகள். உயிரியல் உர எரியூட்டு மூலப்பொருட்களால் உருண்டை பிடித்து வைக்கப்பட்டுள்ள விதைப்பந்துகள்தான் அந்த அழைப்பிதழில் இருந்தவை. இவற்றை என்ன செய்ய? அதற்குத்தான் அவரது நண்பர் ‘நண்பா என் திருமண அழைப்பிதழை, என் திருமணத்தை அட்டென் செய்த பிறகு, நிச்சயம் நீ தூக்கி எறிந்துவிடுவாய் என தெரியும்.. நல்லது அப்படியே தூக்கி எறிந்துவிடு.. அப்போது இந்த விதைகள் விருட்சம் பெற்று மரமாக வளரும்’ என்று சொல்லியிருக்கிறார்.

வீடியோவில் பேசும் நபர் இதனை நினைவுபடுத்தி, தானும் தன் திருமணத்துக்கு இவ்வாறு செய்யவிருப்பதாகவும் இந்த புதுமையான விஷயத்தை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்திய Seedboys.in நிறுவனத்தையும் பாராட்டி பதிவு செய்துள்ளார்.

Tags : #INVITATION #MARRIAGE #NATURE #ENVIRONMENT #VIRAL