'நீங்க எல்லாம் வேற லெவல் பண்றீங்க'...கல்யாண மாப்பிள்ளையின் ஷாக்கிங் என்ட்ரி...வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 02, 2019 03:27 PM

திருமணத்திற்கு மணமகன் ரோட் ரோலரில் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Groom arrives on road roller for his wedding video goes viral

வாழ்க்கையின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று திருமண நாள்.அந்த நாளை அவரவர் தங்களின் வசதிக்கேற்ப எப்படி சிறப்பிக்க முடியுமோ அவ்வாறு சிறப்பித்து கொள்வார்கள்.சிலர் ஆகாயத்திலும்,கடலுக்கு அடியிலும் கூட தங்களின் திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்.அந்த வகையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்று அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

பொதுவாக திருமணத்தில் மாப்பிளை அழைப்பு என்பது மிக முக்கியமான நிகழ்வாகும்.அதற்காக மாப்பிளை காரிலோ அல்லது குதிரை வண்டியிலோ வருவது வழக்கம்.இந்த நிகழ்வின் போது உறவினர்கள்,நண்பர்கள் புடைசூழ மாப்பிளை அழைத்து வரப்படுவது வழக்கம்.ஆனால் சற்று வித்தியாசமாக மேற்குவங்க மாநிலம் நடியா மாவட்டத்தின் கிருஷ்ணாநகரை சேர்ந்த அர்கா பட்ரா என்பவர்,தன்னுடைய திருமணத்திற்கு ''ரோட் ரோலரில்'' அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பாரம்பரிய உடையணிந்து மேளதாளங்களுடன்,மணமகன் ரோட் ரோலரில் வந்தது அங்கிருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.ரோட் ரோலரில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் மணமகன் அமர்ந்து வந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Tags : #TWITTER #WEST BENGAL #GROOM #ROAD ROLLER #WEDDING