‘மகா மாநாட்டில்’ மம்தா பானர்ஜியின் உபசரிப்புக்கு குவியும் பாராட்டுக்கள்.. வைரல் ஃபோட்டோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 22, 2019 01:01 PM

மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவருமான மம்தா பானர்ஜி சமீபத்தில் ட்ரெண்டிங் ஹேஷ்டேகுகளில் வெகுவாக இடம் பிடித்து வருகிறார்.

Mamata Banerjee serves food to political leaders, photo goes viral

இதன் ஒரு பகுதியாக கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசிய கட்சிக்கு எதிராக இந்தியாவின் பலதரப்பட்ட மாநிலங்களில் இருந்து திரளான அனைத்துக் கட்சியினரையும் அழைத்து மகா மாநாடு ஒன்றை மாஸாக நடத்தியுள்ளார்.

ஏறத்தாழ இந்தியா முழுவதுமிருந்து 25 பிரம்மாண்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த பெரும் மாநாட்டில் வந்திருந்தவர்களுக்கு மம்தா பானர்ஜி, தானே விருந்து உபசரிப்பு அளித்து பரிமாறும் புகைப்படம்தான் இணையத்தில் லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகிறது. ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் அரசியல் ஆலோசகர் சஞ்சய் யாதவ், ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படத்தில் மம்தா பானர்ஜி, புன்னகையுடன் பட்டியல் இன மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து வரும் ஹர்திக் படேலுக்கு பரிமாறுகிறார். 

மேலும் இந்த புகைப்படத்தில் மம்தாவின் உபசரிப்பில் குஜராத்தின் சுயேட்சை எம்.எல்.ஏவும் தலித் போராளியுமான ஜிக்னேஷ் மேவானி தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு, ராஷ்டிர ஜனதா தள கட்சித்தலைவர் தேஜாஷ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் ஷரத் பவார் உள்ளிட்டோர் உணவருந்தும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #MKSTALIN #JIGNESH MEVANI #ANTI-BJP RALLY #WEST BENGAL #MAMATA BANERJEE #KOLKATA #TRINAMOOL CONGRESS #2019 LOK SABHA ELECTIONS