'பிக்பாஸ் மாமியார் பிண்றாங்க'.. ஐஸ் அம்மாவைக் கலாய்த்த முன்னாள் போட்டியாளர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 02, 2018 06:25 PM
Biggboss Maamiyaar Pindranga: Actress Harathi

நேற்றிரவு பிக்பாஸ் மேடையில் யாஷிகாவின் பெற்றோர்,ஐஸ்வர்யாவின் தாய்-சகோதரி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களை மேடைக்கு அழைத்து கமல் அவர்களிடம் உரையாடினார்.

 

ஐஸ்வர்யா அம்மா பேசுகையில் தூரம் காரணமாக தனது மகளைப் பிரிந்திருப்பதாக சொன்னார்.(வீட்டுக்குள் தனது அம்மாவுக்கு பணம் தான் முக்கியம் என ஐஸ்வர்யா சொல்லியிருந்தார்)

 

இதுகுறித்து நடிகை ஆர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ''கமல் சாருக்கு பெங்காலி பாஷை தெரியுமே.பொண்ணு சொன்ன ஸ்டோரி அம்மாக்கு சொல்லி கொடுக்கலையோ.பிக்பாஸ் மாமியார் பிண்றாங்க,'' என தெரிவித்துள்ளார்.

 

பிக்பாஸ் வாராவாரம் ஐஸ்வர்யாவைக்  காப்பாற்ற முயற்சிப்பதால் ஐஸ்வர்யாவின் அம்மாவை, பிக்பாஸ் மாமியார் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.