ஒரு மஹத் வெளில போனா..6 மஹத் உள்ள இருக்காங்க!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 31, 2018 10:38 AM
Biggboss 2 Tamil: August 31st Promo Video 1

இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் பாலாஜி-டேனி இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.அப்போது பாலாஜி டேனியிடம், ''ஒரு மஹத் வெளில போனான்னு நெனைக்காத. பதிலுக்கு 6 மஹத் உள்ள இருக்காங்க.இங்க இருக்கற ஒவ்வொருத்தரும் ஒரு மஹத் தான் என்று கூறுகிறார்.

 

அப்போது கேமரா யாஷிகா-ஐஸ்-ஜனனி-மும்தாஜ் ஆகியோரைக் காட்டுகிறது. இதனால் பாலாஜி அவர்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார் என்ற யூகம் எழுகிறது.இதனால் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் சண்டை-சச்சரவுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பிக்பாஸ் பாலாஜி பேசுறதுக்கு தயவுசெஞ்சி சப்-டைட்டில் போடுங்க...