'எலிமினேஷன்' ஆன கையோடு காதலியைக் 'கரம்பிடித்த' டேனி.. விவரம் உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 03, 2018 02:09 PM
Biggboss congtestant Daniel Married Longtime girlfriend

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கையோடு, தனது நீண்டநாள் காதலியைக் கரம்பிடித்து மணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார் டேனி.

 

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''எனது காதலி குட்டுவை மனைவியாக உங்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். சில குடும்ப பிரச்சினைகளால் இதனை அனைவரிடமும் என்னால் சொல்ல முடியவில்லை.உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களோடு நாங்கள் கணவன்-மனைவியாக புது வாழ்க்கையை தொடங்குகிறோம்,'' என குறிப்பிட்டுள்ளார். 

 

மணவாழ்க்கைக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் டேனி-குட்டு..