பாலாஜி அல்லது ரித்விகா 'வெற்றிபெற' வேண்டுகிறேன்: நித்யா

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 04, 2018 12:08 PM
Do not play with emotions: Nithya

பிக்பாஸ் வீட்டில் நித்யா தொடர்பாக பேச்சு வந்தபோது மும்தாஜிடம், ரித்விகா, ''நித்யா இந்த வீட்டில் 4 வாரங்கள் இருந்துள்ளார். அவர் சுற்றிவளைத்து பேசக்கூடியவர் அல்ல. அவர் வெளியில் இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்துள்ளார். அதனால் நீங்கள் அன்பை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக தெரிந்திருக்கலாம்.அதைத்தான் நித்யாவும் சொல்லி இருப்பார்,''என்றார்.

 

இந்தநிலையில் இதுகுறித்து நித்யா தனது ட்விட்டர் பக்கத்தில்,''பிக்பாஸ் வீட்டில் எங்களுக்கு இருந்த புரிதலுக்கு ரித்விகாவுக்கு நன்றி.என் மனதில் இருப்பதை அவர் பேசிவிட்டார். ரித்விகா அல்லது பாலாஜி வெற்றி பெறவேண்டும் என நம்புகிறேன்,பிரார்த்திக்கிறேன். உணர்ச்சிகளை வைத்து விளையாடாதீர்கள்,''என தெரிவித்திருக்கிறார்.