பாஜக தலைவரை பொது இடத்தில் வைத்து அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ... வைரலாகும் வீடியோ !

Home > News Shots > தமிழ்

By Jeno | Aug 27, 2018 12:33 PM
Congress MLA Umang Singhar slaps bjp officer bearer in dhar video goes

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர் ஒருவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம் தண்டா பகுதியில் மின்சாரம் தாக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. குழந்தையின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதற்காக பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சென்றனர். அப்போது இரு கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

 

உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதில், பாராட்டை பெற வேண்டும் என்று இரு நிர்வாகிகளும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.அது இறுதியில் கைகலப்பாக மாறியது.அப்போது, உள்ளூர் பா.ஜ.க தலைவர் பிரதீப் காடியா என்பவரை, காங்கிரஸ் எம்.எல்.ஏ உமாங் சிங்கார் கன்னத்தில் அறைந்தார்.இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

பா.ஜ.க தலைவரை காங்கிரஸ் எம்.எல்.ஏ தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காவல்துறையினர், இரு தரப்பினரையும் பிரித்துவைத்தனர். இதுகுறித்து பிரதீர் காடியா அளித்த புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ உமாங் சிங்கார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : #BJP #CONGRESS