'சில நேரங்களில் தோல்வியும் அடைகிறோம்’.. சோனியா காந்தி!

Home > News Shots > தமிழ்

By |
Sonia Gandhi made a statement about Rajya Sabha Election

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் ஹரிவன்ஷ் 125 வாக்குகள் பெற்றுள்ளார். அவருக்கு எதிராக நின்று 105 வாக்குகள் பெற்று  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹரிபிரசாத் தோல்வியடைந்தார். அதிமுக எம்பிக்கள் 13 பேரும் பாஜகவிற்கு வாக்களித்தனர்.  இந்த தோல்வி குறித்து கருத்து சொன்ன, சோனியா காந்தி, ‘நாம் சில நேரங்களில் வெற்றியும் பெறுகிறோம்,  சில நேரங்களில் தோல்வியும் அடைகிறோம்’ என்று கூறினார்.

 

மத்தியில் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் கடும் போட்டி நிலவும் இந்த நிலையில், காங்கிரஸின் தோல்வி குறித்த சோனியா காந்தியின் இந்த கருத்து காங்கிரஸின் சுய விமர்சனத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும், அதே சமயத்தில் மாநிலங்களவையில் பாஜகவின் செல்வாக்கை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளதாகவும் அரசியல் ஆர்வலகர்கள் சமூக வலைதளங்களில் ட்வீட்டி வருகின்றனர். 

Tags : #SONIYAGANDHI #BJP #CONGRESS