பாஜக-வின் 'முதல் பிரதமர்' வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி காலமானார்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Aug 16, 2018 05:46 PM
Former pm of india atal bihari vajpayee passed away

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிஹாரி  வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிக்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்காலமானார்.

 

கடந்த 24 மணி நேரத்தில் வாஜ்பாயின் உடல்நிலை மிகுந்த அளவில் மோசமடைந்து வந்தது. உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவரது உடல் இயக்கம் செயல்பட்டுவந்தது.

 

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து ஓய்வில் இருந்துவருகிறார்.சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடந்த ஜூன் 11-ம் தேதி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #BJP #INDIA