ஆட்சிக்கு வந்து 5வது ஆண்டாக சுதந்திர கொடி ஏற்றிய மோடி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 15, 2018 11:46 AM
PM at Indian Independence Day Celebrations 2018

இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொடியேற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய தேசம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக பேச்சைத் தொடங்கினார். 

 

குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களைக் கூறிய பிரதமர், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஜிஎஸ்டிக்கு பிறகு உலக அளவில் 6-வது பொருளாதார வலிமையுள்ள நாடாக இந்திய வளர்ந்துள்ளதாகவும்  அம்பேத்கர் கொடுத்த அரசியல் சட்டம் தான், நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவதாகவும் தெரிவித்தார். 

 

பிரதமராக பதவியேற்ற பிறகு 5வது ஆண்டாக சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றி நரேந்திர மோடி பேசியுள்ளது குறிப்பிடத் தக்கது. 

Tags : #NARENDRAMODI #INDEPENDENCEDAY2018 #INDIA #72NDINDEPENDENCEDAYOFINDIA