சுதந்திர தினத்தையொட்டி வண்ணமயமான செங்கோட்டை!

Home > News Shots > தமிழ்

By |
Red Fort illuminated with lamps

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம். நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

மேலும் சுதந்திர தினத்துக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின்,  கலாச்சார துறை அமைச்சகம் டெல்லியில் உள்ள செங்கோட்டையை 2,600 வண்ண விளக்குகளால் அலங்கரித்து ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான ஒத்திகையாக நேற்று மாலை 6.30 மணி முதல் 11 மணி வரை டெல்லி செங்கோட்டையில் எரிந்த விளக்குகளின் வண்ணமயத்தை பலரும் கண்டுகளித்தனர். 

 

இந்த விளக்குகள் சுதந்திர தினம் வரை தினமும் எரியவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தமிழகத்தில் சுதந்திர தினத்தை அரசு கொண்டாடும் வகையில், காலாட்படை, குதிரைப்படை, பாதுகாப்புப் படை வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையும் பார்த்துள்ளனர்.

Tags : #INDIA #INDEPENDENCE2018 #REDFORTINDIA