நாடாளுமன்ற தேர்தல் வியூகம்.. மையக்குழுவை அமைத்த ராகுல் காந்தி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 25, 2018 05:50 PM
RahulGandhi constitutes Core Group Committee

நாடாளுமன்ற தேர்தலுக்காக  9 பேர் கொண்ட மைய குழுவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அமைத்துள்ளார்.  இதைத்தவிர, காங்கிரஸுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க 19 பேர் கொண்ட குழுவும், தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரத்தியேகமான 13 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளனர்.

 

முதற்கட்டமாக 9 பேர் கொண்ட காங்கிரஸ் மைய குழுவில் ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம், அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 

மேலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரில் சசி தரூர், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோரும்,  பிரச்சார குழுவினரில்  அனந்த் சர்மா, திவ்யா ஸ்பந்தனாஸ், ராஜிவ் சுக்லா,மனிஷ் திவாரி, ரந்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். 

 

வரவிருக்கும் 2019ம் ஆண்டில் நிகழவிருக்கும் லோக் சபா தேர்தலுக்காக ராகுல் காந்தி வகுத்துள்ள வியூகம் குறித்த கருத்துக்கள் இப்போதே எழத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.