களத்தில் 'கனா'வும் குதித்தது.. நேரடியாக மோதும் பெரிய படங்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 04, 2018 10:37 PM
5 Films planned to release for Christams 2018

இந்த வருடத்தின் கடைசி மாதமான டிசம்பரைக் குறிவைத்து எக்கச்சக்கமான படங்கள் களமிறங்குகின்றன. குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய நாட்களைக் குறிவைத்து சுமார் 5 படங்கள் டிசம்பர் 21-ம் தேதி களமிறங்குகின்றன.

 

ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுஷின் மாரி 2, சிவகார்த்திகேயனின் கனா, விஜய் சேதுபதியின் சீதக்காதி, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார் பட்டி சிங்கம் ஆகிய 5 படங்கள் ஒரே தேதியில் வெளியாகின்றன. 5 படங்களுமே ஓரளவு பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் இந்த கிறிஸ்துமஸ் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.