பேர மாத்துனா கப்ப ஜெயிச்சிடலாமா?.. அதிகாரப்பூர்வமாக பெயரை மாற்றிய அணி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 04, 2018 08:37 PM
#IPL2019: Delhi Daredevils renamed as Delhi Capitals

12-வது ஐபிஎல்லுக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் 18-ம் தேதி வருகின்ற ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை ஒவ்வொரு அணியும் தீவிரமாக செய்து வருகிறது.

 

இந்த நிலையில் தங்களது அணியின் புதிய பெயரை அதிகாரப்பூர்வமாகடெல்லி அணி அறிவித்துள்ளது. அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணி இனி டெல்லி கேபிட்டல்ஸ் அணி என்று அழைக்கப்படும்.

 

டெல்லி அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் 11 தொடர்களில் ஆடியும் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. 2018 தொடரில் அட்டவணையில் கடைசி அணியாக முடிந்தது.

 

டெல்லி கேப்பிடல்ஸ் அணி பெயர் மாற்றத்துடன் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் கோப்பையை வெல்லுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.