'இந்தியன் 2-தான் எனது கடைசி படம்'.. ரசிகர்களை அதிரவைத்த பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 04, 2018 07:06 PM
Actor Kamal Haasan reveals Indian 2 would be his last film

இந்தியன் 2  திரைப்படம் தான், தனது கடைசி படம் என்று நடிகர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கிழக்கு பாலம் என்ற கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கமல் ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,'' இந்தியன் 2-தான் எனது கடைசி படமாக இருக்கும்,'' என தெரிவித்தார்.

 

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்த முடிவு செய்து கமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்தியன் 2 படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 14-ம் தேதி தொடங்கப்பட்டு வருகின்ற 2019-ம் ஆண்டு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.