ஓட்டுக்கு ரூ.5,000 வாங்கினால், ஒருநாளைக்கு ஒரு தேநீர் கூட குடிக்க முடியாது!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 11, 2018 12:34 PM
Actor and politician Kamalhaasan\'s Political Speech at Krishnagiri

ஓட்டுக்கு ரூ.5,000 வாங்கினால் 5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் ஒருநாளைக்கு தேநீர் கூட குடிக்க முடியாது. பணத்துக்காக வாக்குகளை விற்றுவிடாதீர்கள்,வாக்குகளை விற்றால் கஷ்டப்பட வேண்டியதுதான் என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசியுள்ளார். 

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களிடையே பேசிய கமல், கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு அதிக அளவிலான ஆற்றல் உள்ளது. தலைவர்கள் தேவையில்லை, நிர்வாகிகள் தான் தேவை, அவர்களை தேர்ந்தெடுக்கும் கடமை மக்களுக்கு உள்ளது என்று கூறினார்.

 

மேலும் கொஞ்சம் கொஞ்சமாக நல்லது செய்ய நேரமில்லை, மொத்தமாக செய்ய வேண்டியதுதான் என்றும், கிராம சபையின் பயனை மக்கள் உணர்ந்தால் அதை பயன்படுத்தியே தீருவீர்கள் என்றும் கூறியவர், ‘தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது’ என்றும் கூறியுள்ளார். 

Tags : #KAMALHAASAN #VISILMAIAM #MAKKALNEETHIMAIAM