"நான் இடைத்தேர்தலை சந்திக்க தயார்"...கமல் அறிவிப்பால் பரபரப்பு!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 07, 2018 07:50 PM
Kamal says Makkal Needhi Maiam is ready to contest Bypolls

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என கமல் அறிவித்துள்ளது,அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மக்கள் நீதி மையத்தின் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது 64-வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் "இடைத்தேர்தல் நடக்குமா நடக்காத என்பது யாருக்கும் தெரியாது.

 

ஆனால் எப்போது நடைபெற்றாலும் இடைத்தேர்தலை சந்திப்பதற்கு எங்கள் கட்சி தயாராக உள்ளது.மேலும் எனக்கு மக்களிடம் வாக்குறுதிகளை அளிப்பதில் உடன்பாடு இல்லை.ஆனால் மக்களிடம் இருந்து நிறைய ஆலோசனைகளை பெற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

கமலின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் தற்போது 20 தொகுதிகள் காலியாக இருக்கிறது.காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த,தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.