‘அரசியல்வாதிகள் தவறுகிறார்கள்’:தன்னம்பிக்கையுடன் தேர்தலில் நிற்கும் ‘பேச்சு-செவி’ மாற்றுத்திறனாளி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 22, 2018 04:01 PM
Inspiring Deaf & mute will contests in state Assembly election

மத்திய பிரதேசம்  சாட்னா தொகுதியில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளவியலாத மாற்றுத்திறனாளி சுதீப் சுக்லா தேர்தலில் நிற்கவிருப்பதாக அறிவித்துள்ளது பலரிடையே பெரும் வரவேற்பை உண்டாக்கியுள்ளது. 

 

ஓட்டு கேட்டுவிட்டு, பின்பு தங்களது கடமைகளை அரசியல்வாதிகள் சிலர் செய்யத் தவறிவிடுவதாகவும், தனக்கு வாய்ப்பளித்தால் மக்களுக்கு பல வகையிலும் சேவை செய்ய விரும்புவதாகவும், மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக வலுவான குரல் கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

 

சுதீப் தான் பணிபுரிந்த இன்ஃபோசிஸ் ஐடி துறையில் இருந்து பணியை துறந்துவிட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்பி அரசியலில் நிற்க விரும்புவது குறிப்பிடத்தக்கது. 

Tags : #ELECTIONS #SUDEEPSUKLA #MADHYAPRADESH #INSPIRING