ஜிம்பாப்வே அதிபரின் வெற்றிக்கு 'தேர்தல் ஆணையத்தின்' முறைகேடு காரணமா?

Home > News Shots > தமிழ்

By |
Zimbabwe\'s President With interesting turns and twist

ஜிம்பாப்வே நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற  அதிபர் தேர்தலில்  ஜனு-பிஎப் கட்சியைச் சேர்ந்த  75 வயதான எம்மர்சன், எம்டிசி கட்சியை சேர்ந்த நெல்சன் சாமிசாவுக்கு எதிராக நின்று வெற்றி பெற்றுள்ளார். ஒட்டுமொத்த நாடாளுமன்ற தொகுதிகளான 153 இடங்களில் 110 இடங்களில் வென்றுள்ள எம்மர்சனின் வெற்றி, தேர்தல் ஆணையத்தின் முறைகேடு காரணமாக நிகழ்ந்ததாக இன்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

1980ம் ஆண்டில் ஜிம்பாப்வே பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர், ஜிம்பாப்வே ஆப்ரிக்க தேசிய கூட்டமைப்பின் தலைவரான ராபர்ட் முகாபே 37 ஆண்டுகளாக தொடர்ந்து அதிபராக பதவி வகித்தார்.  ஆனால் 94 வயதான இவர் கடந்த ஆண்டு துணை அதிபராக இருந்துவந்த எம்மர்சன், நங்கக்வாவை பதவி நீக்கம் செய்தார்.

 

அதைத் தொடர்ந்து ராபர்ட் தன் மனைவி கிரேஸை அதிபராக்க முயற்சித்த போது ராணுவ தளபதி கான்ஸ்டண்டினோ சிவெங்கா கடும் எதிர் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ராணுவத்தின் வசம் கொண்டு வந்து, ராபர்ட் முகாபேவை வீட்டுக் காவலில் வைத்தார். இதனால் ராபர்ட் முகாபே பதவி விலகினார். அதன் பிறகு  கடந்த ஜீலை 30 அன்று நடைபெற்ற இந்த தேர்தலில் எம்மர்சன் வெற்றி பெற்றார்.

Tags : #ELECTIONS #ELECTIONCOMMISSION #ZIMBABWE #EMMERSONMNANGAGWA #ZIMBABWEPRESIDENTELECTION2018