ஷங்கர்-கமல் கூட்டணியில் உருவாகும்..இந்தியன் 2-வின் 'ஹீரோயின்' இவர்தான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 03, 2018 07:58 PM
Kajal Agarwal to play the Heroine in Kamal\'s Indian 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் 'இந்தியன் 2' படத்தின் ஹீரோயின் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

 

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கவிருக்கும் 'இந்தியன் 2' படத்தின் ஹீரோயின் இவர்தான்  என, பல்வேறு யூகங்கள் அடிபட்டன. இதுகுறித்து படக்குழுவும் தொடர்ந்து அமைதி காத்து வந்தது.

 

இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தில் நான் நடிக்கிறேன் என, நடிகை காஜல் அகர்வால் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவொன்றில் கலந்து கொண்டு பேசிய காஜல்,'' நான் அடுத்ததாக சாய்(ஸ்ரீனிவாஸ்) மற்றும் கமல்ஹாசன்(இந்தியன் 2) சார் படங்களில் நடிக்கிறேன்,'' என தெரிவித்தார்.

 

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #KAMALHAASAN