ஆண்களிடம் மனதில் பட்டதைப் பேசும்.. பெண்ணைப் பார்ப்பது நன்றாக உள்ளது!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 20, 2018 09:42 PM
Director Gautham Menon talks about Vada Chennai

கடிந்து பேசும் ஆண்களிடம் தன் மனதில் பட்டதைப் பேசும் பெண்ணைப் பார்ப்பது நன்றாக உள்ளது என வடசென்னை படத்தை இயக்குநர் கவுதம் மேனன் பாராட்டியுள்ளார்.

 

கடந்த 7-ம் தேதி வெளியான 'வடசென்னை' திரைப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.

 

இந்தநிலையில் இயக்குநர் கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் வடசென்னை படம் குறித்து வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து அவர்,'' வெற்றிமாறனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.எழுத்து,இயக்கம் என்று வரும் நேரம் தியேட்டரில்  ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரச் சத்தத்தைக் கேட்பதைவிட சிறந்த உணர்வு இல்லை. அவருக்கு எளிதாக வரும் ஒரு விஷயத்தை மிகவும் புத்திசாலித்தனமாகச் செய்துள்ள தனுஷைத் தாண்டி பார்வை வேறு எங்கும் செல்லவில்லை.

 

தைரியமான  கதாபாத்திரத்தில் அழகாக ஆண்ட்ரியா உயர்ந்து நிற்கிறார். கடிந்து பேசும் இளம் பெண் கதாபாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்திழுக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கடிந்து பேசும் ஆண்களிடம் தன் மனதில் பட்டதைப் பேசும் பெண்ணைப் பார்ப்பது நன்றாக உள்ளது,'' என தெரிவித்துள்ளார்.

Tags : #DHANUSH #VADACHENNAI