'சினிமாவை விட்டு விலகிய' சிம்பு-தனுஷ் நடிகை.. காரணம் இதுதான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 17, 2018 07:48 PM
Actress Richa Gangopadhyay says she won\'t return to film industry

சினிமாவுக்கு மீண்டும் திரும்ப மாட்டேன் என சிம்பு, தனுஷ் படங்களின் நடிகை ரிச்சா கங்கோபாத்பாய் தெரிவித்திருக்கிறார்.

 

தனுஷின் 'மயக்கம் என்ன' படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரிச்சா தொடர்ந்து சிம்புவுடன் 'ஒஸ்தி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தெலுங்கு படங்களிலும் அவ்வப்போது நடித்து வந்தார்.

 

இந்தநிலையில் சினிமாவில் நடிக்க விரும்பவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் ரிச்சா,'' எனக்கு 90 வயது ஆனாலும் கூட ரசிகர்கள் உங்களது அடுத்த படம் எப்போது? என்று கேட்பார்கள்.  யதார்த்தத்தை நான் கண்டிப்பாக ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில் சினிமா என்பது ஒரு குறுகிய காலம் மட்டும் தான். அதற்குள் நான் மீண்டும் திரும்ப விரும்பவில்லை. கடந்துவிட்டேன்,'' என தெரிவித்துள்ளார்.

 

படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரிச்சா மேற்படிப்பிற்காக தற்போது அமெரிக்கா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #DHANUSH #TWITTER #SIMBU #RICHAGANGOPADHYAY