என்னது 'வட சென்னை' படத்துல ராஜனா நடிச்சது 'பருத்திவீரன்' அமீரா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 26, 2018 05:52 PM
Director Anurag Kashyap praised Vada Chennai cast and crew

'வட சென்னை' படத்தில் ராஜனாக நடித்தது அமீர் சுல்தானா? என, பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் கேட்டிருக்கிறார்.

 

கடந்த 17-ம் தேதி வெளியான 'வட சென்னை' படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்று வருகிறது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பு படத்தின் வசூலிலும் எதிரொலித்துள்ளதால், படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

நடிகர்கள், இயக்குநர்கள் என வட சென்னையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் இயக்குநரும், 'இமைக்கா நொடிகள்' படத்தின் வில்லனுமான அனுராக் காஷ்யப்பும் படத்தை பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 

அதில்,''நான் பார்த்திலேயே அருமையான ஒரிஜனலான கேங்ஸ்டர் படம் இது. வெற்றிமாறன் ஒரு பிரமாதமான ஃபிலிம் மேக்கர்.ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, தனுஷ் ஆகியோர் நன்றாக நடித்திருந்தார்கள். செந்தில், ராஜன், பத்மா கேரக்டரில் நடித்த நடிகர்களும் அருமையாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, கண்ணன் கேரக்டரில் நடித்த நடிகர், தனுஷுக்காக தன் அப்பாவிடம் பேசும் காட்சிகள் பிரமாதம்" என தெரிவித்திருந்தார்.

 

அவரின் ட்வீட்டுக்கு கீழே ரசிகர் ஒருவர், ''ராஜன் கதாபாத்திரத்தில் நடித்தது பருத்திவீரன் இயக்குநர்,'' என தெரிவிக்க, பதிலுக்கு அனுராக்,''என்னது அது அமீர் சுல்தானா? என ஆச்சரியமாக கேட்டிருக்கிறார்.

Tags : #VADACHENNAI #DHANUSH #AMEER #ANURAGKASHYAP