தனுஷின் மாரி 2 'ட்ரெய்லர்+வெளியீட்டுத் தேதி' இதுதான்

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 04, 2018 11:03 AM
Dhanush\'s Maari 2 release date officially announced

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துவரும் 'மாரி 2' படத்தின் வெளியீட்டுத்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற மாரி படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் படம் மாரி 2. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹீரோவாக தனுஷும் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் டொவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர் நடித்திருக்கும் இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார்.

 

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த விவரங்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதன்படி இப்படத்தின் ட்ரெய்லர் நாளையும்(5.12.18) படம் வருகின்ற 21-ம் தேதியும் வெளியாகிறது.

 

Tags : #DHANUSH #MAARI2