அடிவாங்கியதாக கூறப்பட்ட ஆட்டோக்காரரை ’இனிப்புடன்’ சந்தித்த தமிழிசை!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 18, 2018 02:28 PM
TN BJP President Tamilisai Soundararajan on Auto Driver attack

சென்னையில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார் தமிழிசை.

 

சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த  ஆட்டோ டிரைவர் ஒருவர்  “ஒரு நிமிஷம் அக்கா, பெட்ரோல் விலை ஏன் உயர்கிறது” என்று தமிழிசையை நோக்கி கேள்வி எழுப்பினார்.ஆனால் அவரின் கேள்விக்கு பதிலளிக்காமல் செய்தியாளர்களை பார்த்துக் கொண்டிருந்த தமிழிசை சிரித்துக் கொண்டே பேட்டியை தொடர்ந்தார். ஆனால், தமிழிசைக்குப் பின்னால் இருந்த பாஜகவினர் உடனடியாக அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து வெளியே தள்ளினர்.இதனால் அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

 

இந்நிலையில் இன்று காலை அந்த ஆட்டோ ஓட்டுநர் கதிரின் வீட்டிற்கு சென்ற தமிழிசை அவரிடம் நலம் விசாரித்தார்.மேலும் ஆட்டோ டிரைவர் கதிருக்கு இனிப்புகளையும் வழங்கினார்.