தமிழகத்தில் பாஜக ’இப்படியான’ அரசியலைத்தான் செய்து வருகிறது..தமிழிசை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 19, 2018 03:02 PM
Tamilisai Soundararajan Condemns on shoes flung at Periyar statue

பாஜகவின் மாநில செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் அண்மையில் நடந்த பெரியார் சிலை அவமதிப்பிற்கும், பாஜகவுக்கும் தொடர்பு இல்லை என்றும் தமிழகத்தில் பாரதி ஜனதா கட்சி ’நாகரிக அரசியலையே’ செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.  இரண்டு நாட்களுக்கு முன்பாக பெரியாரின் சிலை மீது பாஜக உறுப்பினர் ஒருவர் ஷூவை வீசிய சம்பவம், பலரின் கண்டனத்துக்கும் ஆளானது.

 

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள தமிழிசை சவுந்தர்ராஜன்,  ’பெரியாரின் திராவிட கொள்கை அல்லது கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து தங்கள் கட்சி மாற்றுக் கொள்கை கருத்தினக் கொண்டிருந்தாலும் பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டது கண்டனத்துக்கு உரியது’ என்று தமிழிசை கூறியுள்ளார்.

Tags : #TAMILISAISOUNDARARAJAN #PERIYAR #BJP #PERIYARSTATUE #DRAVIDARKAZHAGAM