'அஸ்வினை விட இவர் தான் பெஸ்ட் ஸ்பின்னர்'...என்னோட தேர்வும் அது தான்...ரவிசாஸ்திரி ஏன் அப்படி சொன்னாரு?

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 05, 2019 09:53 PM

அயல்நாடுகளில் நடைபெறும் 50 ஓவர்கள் போட்டிகளில் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளிலும் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசுவதால்,என்னோட தேர்வு அவர் தான் என ரவி சாஸ்திரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Ravi Shastri Prefers Kuldeep Yadav Over Ravichandran Ashwin

சமீபகாலமாக அஸ்வின் தனது காயங்களை சரிவர கவனிப்பதில்லை என விராட் கோலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.தற்போது ரவி சாஸ்திரியும்,குல்தீப் யாதவ் குறித்து பெருமையாக பேசி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்நிலையில் கிரிக்பஸ் என்ற இணையதளத்துக்கு ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் இதுகுறித்து விரிவாக தெரிவித்துள்ளார்.

குல்தீப் அயல்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடங்கி விட்டார்.அதோடு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.இதனால் நமது வெளிநாட்டு பிட்ச்களுக்கான முதன்மை ஸ்பின்னர் நிச்சயம் அவர் தான்.ஒரு ஸ்பின்னர்தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால்,நிச்சயம் குல்தீப் யாதவை தான் தேர்வு செய்வோம்.

மேலும் அஸ்வின் குறித்து கூறும்போது அனைவருக்கும் நேரம் என்ற ஒன்று உண்டு.தற்போதைய நிலையினை வைத்து பார்க்கும் போது,குல்தீப் யாதவ்தான் நம்முடைய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்.குல்தீப் யாதவின் பந்து வீச்சு திறன் வெளிநாடுகளில் நடந்த போட்டிகளில் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது.அதில் அவர் தான் நம்பர் 1என்பதை காட்டுகிறது.இது ரிஸ்ட் ஸ்பின் காலம்.அதை குல்தீப் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்.அதனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் குல்தீப்பை கணிக்க முடியாமல் திணறுகிறார்கள் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Tags : #RAVICHANDRAN ASHWIN #BCCI #RAVI SHASTRI #KULDEEP YADAV #OVERSEAS SPINNER