'நியூசிலாந்து வீரர்களை அலற விட போகிறாரா இவர்'...வைரலாகும் இந்திய வீரரின்...வித்தியாசமான பயிற்சி வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 05, 2019 07:15 PM

வெலிங்டனில் நாளை துவங்க இருக்கும் டி20 தொடருக்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் தீவிரமா ஈடுபட்டு வருகிறார்கள்.இதில் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் மேற்கொண்ட வலை பயிற்சி வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Rishabh Pant Attempts A Switch-Hit At The Nets Ahead Of T20I Series

நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.இதனைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.இதன் முதல் போட்டியானது நாளை வெலிங்டனில் ஆரம்பிக்க இருக்கிறது.அதனை தொடர்ந்து,ஆக்லாந்து மற்றும் ஹாமில்டனில் அடுத்த டி20 போட்டிகள் நடக்க இருக்கின்றன.

இந்நிலையில் தொடர் போட்டிகளுக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இளம் வீரரான ரிஷப் பண்ட் வித்தியாசமான ''ஸ்விட்ச் ஹிட்'' ஆடி பயிற்சி பெற்றார். இந்த ஷாட்கள்  பீட்டர்சன் மற்றும் வார்னர் வழக்கமாக ஆடும் ஷாட்கள் ஆகும்.தற்போது ரிஷப் பண்ட்டின் வலை பயிற்சி வீடியோ வைரலாகி வருகிறது.

Tags : #CRICKET #BCCI #DAVIDWARNER #RISHABH PANT #NEW ZEALAND #T20I SERIES #A SWITCH-HIT