‘கோலி இல்லல?.. 3-வதா என்ன எறக்கிவிடுறீங்களா?’.. ரோஹித்திடம் கேள்வி கேட்ட வீரர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 04, 2019 04:49 PM

இந்திய அணியின் மிக முக்கியமான சுழற்பந்து வீச்சாளர் சஹால்,  ‘விராட் கோலி அணியில் இல்லை என்பதால் அவரை இறக்கிவிடும் அதே பேட்டிங் எண்வரிசையில் தன்னை இறக்கிவிட முடியுமா’ என்று இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் கேட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

will you promote me to enter in kohli\'s order, chahal asks to rohit

இந்தியா- நியூஸிலாந்து இடையேயான 5-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், கிரிக்கெட் மைதானத்திலேயே நின்றபடி, கிரிக்கெட் வீரர் சஹால் தனது சஹால் டிவி நிகழ்ச்சிக்காக கிரிக்கெட் வீரர்களை பேட்டி எடுக்கத் தொடங்கினார். முன்னதாக ஆஸ்திரேலியாவில் இதே போல் பேட்டி எடுத்தபோதுதான் சஹால் டிவி பிரபலமானது இந்த நிலையில் தற்போது நியூஸிலாந்திலும் அதே போல் சஹால் பேட்டி எடுத்தார்.

முன்னதாக தோனியை பேட்டி எடுக்க முயன்றபோது, அவர் முரண்டு பிடித்து ஓடிவிட்டார். அதன் பின்னரே ரோஹித் ஷர்மாவை சஹால் மைதானத்தில் நின்றபடி பேட்டி எடுத்தார். அதில், சஹால் விளையாட்டாக, ‘3-வது ஆளாக கோலி களமிறங்குவார். அவர் இல்லாததால் என்னை பேட்டிங் வரிசையில் 3-வது வீரராக களமிறக்குவீர்களா?’என்று கேட்டார்.

தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடியதால், விராட் கோலிக்கு ஓய்வு தேவை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்ததை அடுத்து விராட் கோலிக்கு பதில் ரோஹித் ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழிநடத்தினார். மேலும் அடுத்து நடக்கவிருக்கும் டி20 தொடரில் இருந்தும் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கோலி அணியில் இருந்தபோது 3-வதாக களமிறக்கப்படுவார். அந்த வாய்ப்பைத்தான் தனக்கு வழங்க முடியுமா என்று சஹால் விளையாட்டாக கேட்டுள்ளார்.

ஆனால் இதற்கு சீரியஸாக பதில் கூறிய, ரோஹித் ஷர்மா, ‘இதுபற்றி நான் அணி நிர்வாகத்திடம் பேசிவிட்டு தகவல் கூறுகிறேன், ஆனால் என்னை பொறுத்தவரை, நீங்கள்(சஹால்) வெற்றி பெறும் அணியில் அதிக ஸ்கோர் செய்த வீரராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன், தோல்வி அடைகிற அணியில் அல்ல’ என்று கூறியுள்ளார்.

Tags : #CHAHALTV #BCCI #ICC #TEAMINDIA #VIRATKOHLI #ROHITSHARMA