‘இன்னும் 3 போட்டிதான்’.. பாகிஸ்தானின் சாதனையை முறியடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 05, 2019 03:59 PM

பாகிஸ்தான் அணி டி20 தொடர்களில் செய்திருந்த சாதனையை இந்திய அணி சமன் செய்வதற்கான வாய்ப்பு தற்போது நெருங்கியுள்ளது. 

Is there chance for India to surpass Pakistans record in T20 match

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி ஒருநாள் தொடரை 4-1 என்கிற கணக்கில் கைப்பற்றி அபாரமாக வெற்றிபெற்றது.

இதனை அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி 11 டி20 தொடர்களில் தொடர்ந்து தோல்வியே சந்திக்காமல் உலக சாதனை படைத்திருந்தது. மேலும் சர்வதேச டி20 போட்டிக்கான தரவரிசையிலும் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்தது. ஆனால் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்கிற கணக்கில் தோல்வியடைந்ததால், தனது சாதனையை இழந்தது.

அதே சமயம் இந்திய அணி இதுவரை 10  டி20 தொடர்களில் விளையாடி அதில் 8 தொடர்களில் வெற்றியும், 2 தொடர்களில் டிராவும் செய்துள்ளது. இதனால் கடந்த 10 தொடர்களில் இந்தியா தொடர்ந்து தோல்வியே சந்திக்காமல் உள்ளது.

இந்நிலையில் நடக்கவிருக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரைக் கைப்பற்றினால் பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்ய இந்திய அணிக்கு வாய்ப்பு உள்ளது.

Tags : #TEAMINDIA #ICC #BCCI #NZVIND #T20 #PAKISTAN