சாலையைக் கடந்த 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 05, 2019 03:56 PM

7 வயது சிறுமி மீது கார் மோதி தூக்கிவீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Car hits 7-yr-old girl - CCTV footage goes viral

சிவகங்கை மாவட்டம் அரசனூரில்  கருப்பசாமி மற்றும் பஞ்சவர்ணம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியனருக்கு 7 வயதில் முத்துப்பிரியா என்கிற பெண்குழந்தை உள்ளது. இவர்கள் உறவினர் திருமணம் ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

அப்போது திருமாஞ்சோலை மாரியம்மன் கோவிலில் சிறுமி முத்துப்பிரியா விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். விளையாடிக் கொண்டிருந்த முத்துப்பிரியா திடீரென சாலையின் குறுக்கே ஓடியுள்ளார். அப்போது சாலையில் வந்து கொண்டிருந்த கார் சிறுமி முத்துப்பிரியாவின் மீது மோதியது. இதில் முத்துப்ரியா தூக்கி வீசப்பட்டார்.

இதைப் பார்த்த முத்துப்பிரியாவின் பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சியாகி உடனடியாக, சிறுமியை மோதிய அதே காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுமி மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை கோமா நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 7 வயது சிறுமி காரில் மோதி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHILDREN #ACCIDENT #BIZARRE #CCTV