சிகப்பு சட்டை அணிய தடை கோரிய மனு.. உச்சநீதிமன்றம் அதிரடி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 05, 2019 03:46 PM

சுப்ரீம் கோர்ட்டை பொருத்தவரை பல லட்சம் வழக்குகள் நிலுவையில் இருக்கவே செய்யும்.  அவற்றுள் பலதரப்பட்ட வழக்குகள் தனி நபரால் சொந்த உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளாக தொடரப்பட்டவை.

SC dismisses the PIL which demanded to bane red dress

இதற்கு பாதிக்கு பாதி அளவு காவல்துறையினரின் சட்டம் ஒழுங்கு மூலம் தொடரப்படும் குற்றவியல் வழக்குகள் மற்றும் சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றால் தொடரப்படும் குற்றவியல் வழக்குகளாக இருக்கும்.  இன்னும் பல வழக்குகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்காகவும் மாறுகின்றன.

சில தனிநபர் குற்றவியல், உரிமையியல் வழக்குகளையும் பொதுநல வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதும் உண்டு. இதேபோல், பொதுநல வழக்குகளை பல தனிநபர்கள் தன்னிச்சையாக, தாமாக முன்வந்து தொடருகின்றனர்.  அப்படியான பொதுநல வழக்குகளை தொடரும் தனிநபருக்கு உதாரணமாக டிராபிக் ராமசாமியை சொல்லலாம்.

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞராவதற்கு எதிரான வழக்கு, பொது இடங்களில் மதுக்கடை உள்ளிட்ட பல வழக்குகளை தனிநபர்களோ, அமைப்போ தாமாக முன்வந்து மனு அளிப்பதனூடே வழக்கு தொடருவார்கள். அப்படி வரும் மனுக்களை பல சமயங்களில் கேலியும், கிண்டலும் நிறைந்திருக்கும். அவற்றில் இருக்கும் அபத்தங்களை பார்த்துவிட்டு நீதிமன்றங்கள் அவற்றை தள்ளுபடி செய்வதோடு, அப்படியான மனுக்களை அளித்து கோர்ட்டின் நேரத்தை வீணடடிப்பவர்களுக்கு அபராதத் தொகையும் விதிக்கப்படும்

அப்படியான ஒரு அபத்தான மனு ஒன்றைத்தான் சமீபத்தில் ஒருவர் உச்சநீதிமன்றத்திடம் அளித்துள்ளார். இதனை ரஞ்சன் கோகாய் தலைமையில் இயங்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிமன்ற அமர்வு விசாரித்தது. அதன்படி, நாடு முழுவதும் யாரும் சிகப்பு ஆடை அணியக்கூடாது என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. அதற்கு என்ன காரணம் என்றே தெரியாத நிலையில், இந்த மனுவை கேலிக்கூத்தாக குறிப்பிட்டு உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

Tags : #RED DRESS #SUPREMECOURT #BIZARRE