'கையில் சிக்காத ஒரே ஒரு குரங்கு செய்த காரியம், ஊரையே காலி செய்த மக்கள்'!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 01, 2019 04:00 PM

ஒரு குரங்கு செய்த காரியத்தால் ஒரு ஊரையே காலி செய்து வெளியேறிய மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

people of this village goes away after getting afraid of A monkey

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தென்னலக்குடி கிராமத்தில் ஒற்றை குரங்கு சுற்றி வந்துள்ளது. இது அப்பகுதியில் வசிக்கும் மக்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக அம்மக்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் அச்சத்திலேயே இருந்துள்ளனர்.

இதனையடுத்து அந்த குரங்கை பிடிக்கக் கோரி வனத்துறைக்கு கிராம மக்கள் தகவல் அளித்துள்ளனர். இவ்வாறு தகவல் வந்ததை அடுத்து வனத்துறையினர் குரங்கை பிடிப்பதற்கு கூண்டு ஒன்றை அமைத்து வைத்துள்ளனர். ஆனாலும் குரங்கு பிடிபடாமல் கிராமத்தைச் சுற்றியே திரிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த 29 -ஆம் தேதி அந்த கிராமத்தைச் சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவரை அந்த குரங்கு கடித்துள்ளது. இதனால் அந்த மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கிராம மக்கள் அனைவரும் ஊரிலிருந்து வெளியேறி கோவிலில் தஞ்சமடைந்துள்ளனர். ஒரு குரங்கால், மக்கள் அனைவரும் ஒரு ஊரையே காலி செய்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #NAGAPATTINAM #BIZARRE #MONKEY ATTACK #TEMPLE #PEOPLE