‘பேஸ்புக்கில் போட்டோவை பதிவிட்ட கணவர்’..மனைவி எடுத்த விபரீத முடிவு!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 01, 2019 03:57 PM

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நபர் ஒருவர் தன் திருமண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றியதால் முதல் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

wife commits suicide after husband post her photo in fb

நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சி பகுதியை சேர்ந்த மாயராமன் என்பவர் தனது மனைவி வைரமுத்துவுடன் வசித்து வந்துள்ளார். மாயராமன் அப்பகுதியில் ஊராட்சி கழகச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். மேலும் மாயராமன் மற்றும் வைரமுத்து தம்பதியினருக்கு திருமணமாகி கடந்த 15 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை என கூறப்படுகிறது.

மேலும் வைரமுத்து அவரது பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார். இந்நிலையில் மாயராமன் குழந்தை இல்லாததை காரணம் காட்டி தனது மனைவி வைரமுத்துவின் தாயிடமிருந்து சொத்துக்களை எழுதி வாங்கியதாக தெரிகிறது. இதனையடுத்து மாயராமன் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக வைரமுத்துவை மிரட்டி வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் மாயராமன் இரண்டாவது திருமணம் செய்ததோடு, தனது திருமண புகைப்படத்தை, ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இதைப்பார்த்த மனைவி, வைரமுத்து தனது தாயாருடன் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். ஆனால் புகாரை வாங்க மறுத்து, வைரமுத்துவையும் அவரது தாயாரையும் காவல் துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து நெல்லை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்த வைரமுத்துவும் அவரது தாயாரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தற்கொலை நடந்த இடத்தில் ஒரு கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை  நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

Tags : #TIRUNELVELI #SUICIDE #BIZARRE #FACEBOOK