'இதயெல்லாம் என் சாவோட நிறுத்திக்கங்க'.. தற்கொலைக்குமுன் டாக்ஸி டிரைவர் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 01, 2019 01:40 PM

சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் கால் டாக்ஸி ஊழியராக பணிபுரிந்த ராஜேஷ், ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்டதோடு, தன் சாவுக்கு காரணம் போலீஸார்தான் என செல்போனில்  தனது தற்கொலைக்கான மிரளவைக்கும் காரணத்தையும் பதிவு செய்துள்ள சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Cab driver commits suicide&records video alleging harassment by police

இதனை ராஜேஷின் குடும்பத்தினர், அவருடைய செல்போன் தரவுகளை பேக்-அப் செய்யும்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒருநாள் பாடியில் இருந்து கோயம்பேட்டுக்குச் செல்லும் சிக்னல் அருகே ஒரு பெண்மணியை இறக்கிவிட்டு, அடுத்த வாடிக்கையாளரை ஏற்றிச் செல்ல முற்பட்டபோது, அங்கு வந்த போலீஸார், ராஜேஷ் காரை அங்கு நிறுத்தியதை கண்டித்து ஆபாச வார்த்தைகளால் பேசி, காரில் பெண் வாடிக்கையாளர் இருக்கும்போது தன்னை இழிவுபடுத்தியதாக ராஜேஷ் வருந்தியுள்ளார்.

காரை எடுக்கச் சொன்னால் எடுத்துவிடலாம், ஆனால் ஒரு காவலர் அத்தனை தரக்குறைவான வார்த்தைகளால் தன்னை பேசவேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பேசிய ராஜேஷ்,  ‘இன்னொரு முறை திருவொற்றியூர் சர்வீஸ் ரோட்டில், வண்டியை பார்க் செய்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த காவல்துறையினர் காரை வெளியில் இருந்து லாக்-செய்துவிட்டு, 500 ரூபாய் பணம் தந்தால் விடுவிப்பதாகக் கூறியுள்ளனர். அந்த 500 ரூபாய்க்கு பில் கேட்டால், என்னிடமே எதிர்த்து பேசுகிறாயா? என்று சொல்கிறார்கள். 8 மணி நேரம் போலீஸார் டியூட்டி பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் எவ்வளவு நேரம் வண்டி ஓட்டுகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா? 3 மணி நேரம்தான் தூங்குகிறேன் நான். ஆனால்  நீங்கள் வைத்ததுதான் சட்டம் என்று இருக்கிறீர்கள். நான் NO PARKING-ல் கூட வண்டியை நிறுத்தவில்லை. என்னிடம் வந்து ஆபாச வார்த்தைகளால் என்னைத் திட்டுவதுதான் உங்களது டியூட்டியா?’ என்று மெல்லிய அழுகையோடு பேசியுள்ளார்.

அதன் பின்னர் அனைவரையும் அதிரவைக்கும் வகையில் ஒவ்வொரு டிரைவரும் செத்துதான் வண்டி ஓட்டுகிறார்கள்.  தரமணியில் ஒருவர் உயிரிழந்தார். அவரைப் போலவே நானும் செய்யப் போகிறேன். இதையெல்லாம் என் சாவோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லையென்றால் வேலையை விட்டு போய்விடுங்கள். மக்கள் கையில் எல்லாத்தையும் கொடுத்துவிடுங்கள், மக்களாவது செய்துகொள்ளட்டும்’ என்று உருக்கமாக பேசியுள்ளார்.

அதன் பின்னர் ராஜேஷ் சென்னை மறைமலை நகர் அருகே, உள்ள ரயில்வே நிலையத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வலம் வருவதை அடுத்து, இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி ஜெயச்சந்திரன் இதனை வழக்காக பதிவுசெய்து மாநகர காவல் ஆணையர், இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரத்தில் முழுமையான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ராஜேஷின் பெற்றோர்கள் பெரும் சோகத்தில் இருப்பதோடு, ராஜேஷின் சாவுக்கு காரணமானவர்களை தண்டிக்கக் கோரி வலியுறுத்தியுள்ளனர்.

Tags : #SUICIDEATTEMPT #TRAINACCIDENT #CALLTAXIDRIVER #BIZARRE #POLICE