‘இவர் உலகக்கோப்பையில் அச்சுறுத்துவார்’.. அவர்’.. சச்சின் பாராட்டிய வீரர்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 05, 2019 11:18 AM

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், தற்போதைய இந்திய அணியின் இளம் வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான பும்ராவை பற்றி குறிப்பிட்டு பேசியுள்ள அனல் பறக்கும் பேச்சு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Sachin Tendulkar Praises These two TeamIndia Players Goes Trending

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு வீரரை பாராட்டினால் நிச்சயம் ஏகோபித்த கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பை அவர் பெறுவார் என்றே சொல்லலாம். அப்படித்தான் சச்சின் டெண்டுல்கர் பும்ராவைப் பற்றி கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் இந்திய அணி அடைந்த வரலாற்று வெற்றிக்கு, பும்ரா தன் அபாரமான பந்துவீச்சினால் 4 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை எடுத்ததும் ஒரு முக்கியமான காரணம். ஆனால் இந்தியாவுக்கு வரவுள்ள ஆஸ்திரேலிய அணியுடன் மோதுவதற்கான பயிற்சி எடுப்பதற்காக கோலியைப் போலவே பும்ராவுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘பும்ராவின் வெற்றி தனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. 2015-லிருந்து கடுமையான பயிற்சி மேற்கொண்டு வரும் பும்ரா பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாத அளவுக்கு திறமையாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றக் கூடியவர். இதனால் உலகக் கோப்பை போட்டிகளில் பும்ரா, எதிரணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்’ என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

இதேபோல், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் பேபிசிட்டருமான ரிஷப் பண்ட், சர்வதேச போட்டிகளில் பயமே இல்லாமல் பந்தினை எதிர்கொள்ளும் விதம் தனக்கு பிடித்துள்ளதாகவும், அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாகவும் சச்சின் டெண்டுல்கர்  பாராட்டியுள்ளார்.

Tags : #WORLDCUP2019 #SACHINTENDULKAR #TEAMINDIA #BCCI #ICC