அடேங்கப்பா..'31 லட்சம் ரூபாய் கொடுத்து காருக்கு நம்பர் வாங்கிய விநோத நபர்’!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 05, 2019 06:47 PM

தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய காரின் பதிவு எண்ணை ரூ.31 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

man spends 31 lakhs to buy a lucky registration number for his new car

கேரளாவைச் சேர்ந்த மருந்து ஆலை உரிமையாளர் கே. எஸ்.பாலகோபால் என்பவர் ரூ.1 கோடி மதிப்புள்ள போர்ஷே கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காருக்கு KL-01-CK-1 என்கிற பேன்ஸி நம்பர் வேண்டும் என்று திருவனந்தபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்திருக்கிறார். மேலும் இதே எண்ணுக்காக ஆனந்த் கணேஷ் மற்றும் சைன் யூசப் என்கிற இருவரும் விண்ணப்பித்துள்ளனர்

இந்நிலையில் ஏலத்தின் அடிப்படையில் அந்த நம்பரை வாங்குவதற்கான போட்டி நடந்தது. நடைபெற்ற ஏலத்தில் ரூ.1 லட்சத்தில் தொடங்கி படிபடியாக ரூ.10 லட்சங்களை தாண்டி சென்றது. இதனையடுத்து ஏலத்தில் போட்டியிட்ட ஆனந்த் கணேஷ் ரூ.10 லட்சத்திலும், சைன் யூசப் ரூ.25.50 லட்சத்திலும் ஏலத்தைக் கைவிட்டனர்.

இறுதியாக அந்த நம்பரை ரூ.31 லட்சத்திற்கு கே. எஸ்.பாலகோபால் ஏலத்தில் எடுத்தார். இதே பாலகோபால் இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.19 லட்சத்திற்கு மற்றொரு காரின் நமபரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #KERALA #CAR #FANCYNUMBERPLATE