திருமணம் நடக்கும் கேப்பில்...'மாப்பிள்ளை செய்த செயல்'...நறுக்குன்னு கேள்வி கேட்ட மணப்பெண்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 30, 2019 10:56 PM

தன்னுடைய திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சில நிமிடங்கள் பிரேக் எடுத்து,கால்பந்து ஆட சென்ற மணமகனின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Kerala Groom Asks Bride For 5 Mins, Leaves Wedding To Play

கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்தவர் ரித்வான் இவர் ஃபிபா மஞ்சேரி அணியில் கால்பந்து ஆடி வருகிறார்..சிறு வயது முதலே தீவிர கால்பந்து வீரரான ரித்வானிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியில் அவர் சார்ந்துள்ள அணியானது மலப்புரம் 7எஸ் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வானது.இதன் சிறப்பு என்னவென்றால் 11 பேருக்குப் பதிலாக 7 பேர் மட்டுமே இதில் ஆடுவார்கள்.இந்த போட்டியானது கேரளாவில் மிக பிரபலம்.

இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் விரைவாக நடந்த நிலையில்,திருமண தேதியையும் மாற்றி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.உடனே யோசித்த ரித்வான் திருமண நாளன்று மனைவியாக போகும் பெண்ணிடம்  5 நிமிடங்கள் பிரேக் வேண்டும் என்று கேட்டு, ஆட்டத்தில் கலந்துகொண்டார்.அவரது அணியும் வெற்றி பெற்றது.

தனது அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் திருமண சடங்குகளில் பங்கேற்ற ரித்வானிடம் மணப்பெண் கேட்ட கேள்விதான்,அவரை தர்மசங்கடமான சூழ்நிலைக்கு கொண்டு சென்றது.மணப்பெண் ரித்வானிடம் ''ஒருவேளை கால்பந்துப் போட்டிகள் மதியத்தில் நடைபெற்றிருந்தால், திருமணத்தை நிறுத்தி இருப்பீர்களா என கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் விழித்தார் ரித்வான்.

இதற்கிடையே திருமணத்துக்கு இடையில் சென்று கால்பந்து விளையாடிய ரித்வானுக்கு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார். ரித்வானைச் சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

Tags : #KERALA #KERALA GROOM #BRIDE