'என்ன ரொம்ப அடிக்குறாங்க'...உடல் முழுவதும் காயங்கள்...பள்ளியில் மாணவனின் மர்ம மரணம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 05, 2019 08:41 PM

உடல் முழுவதும் காயங்களுடன்,தனியார் பள்ளி விடுதியில் மாணவன் ஒருவன் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Perambalur school student found dead in school hostel

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த உத்தாண்டம்- தேன்மொழி தம்பதியின் மகன் உதயநிதி.இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ப்ளஸ் டூ படித்துவந்தார்.பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த உதயநிதி,தினமும் இரவு அவரின் தந்தையிடம் போனில் பேசுவது வழக்கம்.அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு தனது தந்தையிடம் பேசும் போது ''இங்க என்ன ரொம்ப அடிக்குறாங்கப்பா'' என போனில் தெரிவித்திருக்கிறார்.அதன் பின்பு தூங்குவதற்காக தனது அறைக்கு சென்று விட்டார் உதயநிதி.

சிறிது நேரம் கழித்து உதயநிதியின் நண்பர்கள் அவரது அறைக்கு சென்றிருக்கிறார்கள்.அப்போது அவரின் அறையானது உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.இதனால் சிறிது நேரம் கதவை தட்டி பார்த்த அவர்கள்,சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது,அங்கு உதயநிதி சடலமாக தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்கள்.உடனே அவர்கள் விடுதி வார்டனிடம் தகவல் தெரிவிக்க,அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்ல தயாரானார்கள்.அப்போது அங்கு வந்த உதயநிதியின் பெற்றோர், மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர், உடலை எடுத்துச் செல்லவிடாமல் உதயநிதியின் உறவினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

இதுக்குறித்து பேசிய மாணவனின் உறவினர்கள் ''உதயநிதி இரவு நன்றாக தான் அவனின் அப்பாவிடம் பேசிவிட்டு தூங்க சென்றான்.ஆனால் சிறிது நேரத்திலேயே அவன் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வருகிறது.எங்களுக்கு முதலில் தகவல் சொல்லாமல் காவல்துறைக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.உதயநிதியின் உடம்பு முழுவதும் காயங்கள் இருக்கிறது.இதனால் அவனின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.உதயநிதியின் மரணம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தார்கள்.

முன்னதாக ஆத்திரமடைந்த உதயநிதியின் உறவினர்கள் பள்ளியை அடித்து நொறுக்கினார்கள்.அதன் பின்பு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.

Tags : #SCHOOLSTUDENT #PERAMBALUR SCHOOL