விடுமுறை அன்று ஸ்பெஷல் கிளாஸ்.. மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 31, 2018 05:33 PM
TN School girl commits suicide during special class in holidays

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள அரசு பள்ளியில் பயின்ற ப்ளஸ் ஒன் மாணவி ஒருவர், சிறப்பு வகுப்பு நடக்கும்போது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பதைபதைக்க வைத்துள்ளது. வாணியம்பாடி அருகே உள்ளது ஆலங்காயம் கல்கோயில் எனும் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த கங்கை அமரனின் 15 வயது மகள் மகாலஷ்மி. அதே பகுதியைச் சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளியில்  பதினோராம் வகுப்பு படித்து வந்த இம்மாணவிக்கு தற்போது அரையாண்டுத் தேர்வுகால விடுமுறை நடந்து வருகிறது.

 

ஆனால் இந்த பள்ளியில் விடுமுறை காலத்தில் அடுத்தடுத்த வகுப்பு பாடங்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.  இந்நிலையில், அப்பள்ளியின் புதிய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் நடந்த சிறப்பு வகுப்புக்கு இன்று சென்ற ப்ளஸ் ஒன் மாணவி மகாலஷ்மி தீடீரென வகுப்பறையில் இருந்து வெளியே வந்துள்ளார். பின்னர் யாரும் எதிர்பாராத நிலையில் அங்கிருந்து கீழே குதித்துள்ளார். 

 

இதனால் தலையில் அடிபட்டு பலத்த காயத்துடன்  சம்பவ இடத்திலேயே துடித்துப்போய் உயிரிழந்தார். பதறிப்போய் மாணவியின் அருகே ஓடிவந்த மாணவர்கள், ஆசிரியர்கள் என பள்ளி பரபரப்பானது.  இதனையடுத்து அங்கு வந்த பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு மாணவியின் தற்கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Tags : #SCHOOLSTUDENT #SUICIDEATTEMPT #VELLORE #SCHOOLGIRL #SPECIALCLASS