'மரணம் மாஸு மரணம்'.. பிரபல நிறுவனத்துடன் கைகோர்த்த 'பேட்ட'

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 06, 2018 09:35 PM
Rajini\'s Petta songs bagged by Sony Music

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 'பேட்ட' திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது.

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிம்ரன், திரிஷா,விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாஸுதீன் சித்திக் மற்றும் மேகா ஆகாஷ் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

 

இந்தநிலையில் இப்படத்தின் பாடல்கள் உரிமையை கைப்பற்றி இருப்பதாக சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது. வருகின்ற 9-ம் தேதி பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #RAJINI #PETTA