"ஹா ஹா ஹா"...மனிதர்களை போல் சிரிக்கும் நாய்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 29, 2018 12:06 PM
Happiness on the dog\'s face after his big jump and laughing like human

நாய்களின் மீது மனிதர்களுக்கு எப்போதுமே தனி பாசம் உண்டு.அதே போல் நாய்களும் மனிதர்களிடம்,மிகுந்த அன்புடனும் நன்றியுடனும் நடந்து கொள்ளும்.தனது எஜமானர்களுடன் பழகி விட்டால் போதும்,அதன்பிறகு அதன் பிணைப்பை அவர்களிடமிருந்து பிரிப்பது மிகவும் கடினமான ஒன்று.

 

அதேபோல் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.உயரமான இடத்திலிருந்து நாய் ஒன்று குதிப்பதற்கு முயன்று கொண்டிருக்கிறது.அதன் எஜமானர் நாயை தாங்கி பிடிப்பதற்கு தயாராக நின்று கொண்டிருக்கிறார்.அருகில் இருப்பவர்கள் நாயை குதிப்பதற்கு உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்நிலையில் சற்றென நாயானது தனது எஜமானரை நோக்கி குதிக்கிறது.அவர் அதை தாங்கி பிடிக்கிறார்.உடனே  நாயானது மகிழ்ச்சியில் "ஹா ஹா ஹா" என மனிதர்களை போல சிரிக்கிறது.இந்த காட்சிகளை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்திருக்கிறார்கள்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #DOG #HAPPINESS #BIG JUMP