‘பிரியாணிக்கு காசா?’.. போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே கடைக்காரருக்கு நடந்த கொடூரம்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 04, 2019 08:20 PM

பிரியாணி கடைக்காரர் பட்டப்பகலில் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

biryani shop owner murdered near a police station in chennai

சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகே ரவி என்பவர் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு ரவுடி ரேடியோ விஜய் என்பவர் ரவியின் பிரியாணிக் கடையில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்துள்ளார். இதனால் ரவிக்கும் ரேடியோ விஜய் என்வருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து ரேடியோ விஜய் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலையான விஜய் தன் இரு நண்பர்களுடன் ரவியின் பிரியாணிக் கடைக்கு வந்துள்ளார். கடையில் இருந்த ரவியை விஜய்-யும் அவரது நண்பர்களும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ரவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வரும் காவல் துறையினர், தொடர்ந்து கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.

காவல் நிலையத்திற்கு அருகிலேயே கொலை நடந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Tags : #CHENNAI #MURDER #BIRIYANI #POLICE STATION