'டிவி சேனல் அதிபர் மர்மான முறையில் மரணம்'...கொலையா?...காவல்துறையினர் தீவிர விசாரணை!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 02, 2019 12:43 PM

உடலில் படுகாயங்களுடன் எக்ஸ்பிரஸ் தெலுங்கு டிவியின் தலைவர் ஜெயராம் சிகுருபதியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது விபத்தா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Telugu TV Channel Head Found Dead In Car In Andhra Pradesh

தெலுங்கில் எக்ஸ்பிரஸ் டிவி என்ற சேனலை நடத்தி வந்தவர் ஜெயராம் சிகுருபதி.சேனல் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டதால் அதை எதிர்கொள்ள முடியாமல்,கடந்த ஓராண்டுக்கு முன்பு அதனை மூடி விட்டார்.சேனலில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சம்பளம் தராததால் அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்  கைது செய்யப்பட்டார்.அதன் பின்பு ஜாமினில் வெளியே வந்த அவர்,தனது பணிகளை கவனித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வியாழன் அன்று ஆந்திராவின் அய்தாவரம் என்ற கிராமத்தில் உடலில் பலத்த காயங்களுடன் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சம்பவம் நடப்பதற்கு 2 நாட்கள் முன்பாகத்தான் ஜெயராம் தனது வீட்டில் இருந்து வெளியே கிளம்பியுள்ளார்.அதன் பின்பு தனது உறவினர்களுடன் போனில் பேசிய அவர் விஜயவாடாவுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறார்கள்.மேலும் விசாரணையில் இன்னொரு நபர் தான்  ஜெயராமின் காரை ஓட்டி வந்தது தெரியவந்துள்ளது.அதோடு காரின் பின் இருக்கையில் கால் வைக்கும் இடத்தில் ஜெயராமின் உடல் கிடந்தது காவல்துறையினருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #TV CHANNEL HEAD #ANDHRA PRADESH #JAYARAM CHIGURUPATI #EXPRESS TV