'உங்களுக்கு கொஞ்சம் டைம் தரேன்...அதுக்குள்ள கலைஞ்சு போய்டுங்க'...'வழிமறைத்த பா.ஜ.க'வினர்'...தெறிக்கவிட்ட சந்திரபாபு நாயுடு! பரபரப்பை கிளப்பியிருக்கும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 05, 2019 04:05 PM
CM Chandra babu Naidu warning protesters in Andhra

அரசு நிகழ்ச்சிக்காக சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின்,வாகனத்தை மறித்த பா.ஜ.க'வினர் மத்தியில், சந்திரபாபு நாயுடு காட்டமாக பேசிய வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

ஆந்திர மாநிலத்துக்கு மோடி வந்தால்,அவரை மாநிலத்திற்குள் அனுமதிக்கமாட்டோம் என தெலுங்கு தேசம் கட்சியினர் முன்னதாக கூறியிருந்தனர். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த பாஜகவினர்,பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று காக்கிநாடா சென்ற,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வாகனத்தை திடீரென மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் வாகனம் திடீரென மறிக்கப்பட்டதால்,பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றமடைந்தார்கள்.

 

உடனே பாதுகாப்பு அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.ஆனால் அவர்கள் கலைந்து செல்ல தொடர்ந்து மறுத்து வந்தார்கள்.இதனால் முதல்வர் வந்த வாகனம் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டது.ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சந்திரபாபு நாயுடு அவரே வாகனத்தை விட்டு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

அப்போது அவர்களிடம் மிகவும் கட்டமாக பேசினார்.''ஆந்திர மாநிலத்தில் பாஜகவை சேர்ந்தவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள எந்தவித உரிமையும் இல்லை.இது போன்று பிரச்னை செய்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.உங்கள் தலைவர் நரேந்திர மோடி செய்ததை வெளியில் சொல்ல,நீங்கள் அவமானபட வேண்டும்.அவர் இந்த மாநிலத்திற்கு என்ன செய்தார்.ஆந்திர மாநிலத்தையே பாழாக்கிவிட்டார் அவர்.மோடியின் பெயரை சொல்லிக்கொண்டு மக்களிடம் செல்லாதீர்கள்.மக்கள் உங்களை விடமாட்டார்கள்.நான் சிறிது நேரம் அவகாசம் தருகிறேன்,மரியாதையாக இந்த இடத்தை விட்டு கலைந்து செல்லுங்கள் என மிகவும் கடுமையாக பேசினார்.

 

தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலானதுடன்,அரசியலில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHANDRA BABU NAIDU #ANDHRA PRADESH